உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு…



யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு பெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகள் கடந்த 3 மாதங்களாக யாழ்.மேல் நீதிமன்றில் ரயல் அட்பார் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் , வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலமகேந்திரன் சசிமகேந்திரன் , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சாட்சியங்களை நிறைவு செய்த நீதிமன்றம், அரச மற்றும் எதிர்த்தரப்பு சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளை குறிப்பிட்டு சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களை வழங்க அனுமதித்துள்ளதுடன், வழக்குடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்களையும் அன்றைய தினம் (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen

மீன் ஏற்றுமதித்தடை நீக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையில் சர்ச்சை (UPDATE)

wpengine