உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மேலும், மஹிந்தவுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட தாம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான சில ஊடகங்களின் தகவலை ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனினும்; ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலம் அவரால் நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமது பொதுத்தேர்தல் திட்டம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அறிவிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா..!

wpengine

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

wpengine

தனித்து களமிறங்கினாலும் ஆதரவு நல்லாட்சிக்கே – அனோமா

wpengine