கேளிக்கை

யுவன் இசையில் அனிருத் பாடல்..



’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் படம் ‘பலூன்’.

ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது. காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் இசையில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். “நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்ற வரிகளுடன் தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். சமீபத்தில் நடிகை ஓவியா பங்கேற்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் நீங்க ஷட்டப் பண்ணுங்க வார்த்தை பிரபலமாகியது குறிப்பிடத்தக்கது.

படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் திகதி வெளியாகிறது.

Related posts

அஜித்தை பின்தள்ளி ஒருமுழம் மேலே உயர்ந்த தனுஷ்

wpengine

SARKAR ஐயும் மிஞ்சிய BIGIL

wpengine

மாஸ்டர் இயக்குனரின் போஸ்டர்

wpengine