உலக செய்திகள்

ஹாங்காங்கில் ஹாட்டோ புயல் விமான சேவைகள் இரத்து..



 

ஹாங்காங்கை ஹாட்டோ எனும் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. புயலின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவின் தெற்கே உள்ள ஹாங்காங் மாகாணத்தில் ஹாட்டோ எனும் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. ஹாங்காங்கின் மையப்பகுதியில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வீடுகளின் கூரை வீசப்பட்டதுள்ளதுடன் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளமையினால் பெரும்பாலான பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

துருக்கி நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி.. – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு…

wpengine

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு…

wpengine

வர்த்தக போரைப் கண்டு அஞ்சப்போவதில்லை – சீனா

wpengine