உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் – உயிரிழந்தோருக்கு தலா 2 மில்லியன் ரூபா நட்டஈடு..



கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(23) கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரையிலும் நட்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், சுமார் 280 குடும்பங்கள் வரை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை…

wpengine

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு…

wpengine

தமிழர் தீர்வுத்திட்டம் குறித்த முக்கட்சி சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – தமிழரசுக்கட்சி

Azeem Kilabdeen