உள்நாட்டு செய்திகள்

பிணை முறி ஆணைக்குழுவிற்கு ரணில் மற்றும் மலிக் அழைக்கப்படல் வேண்டும்..



மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பிணை முறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் பிரதான சாட்சியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனவும் ஐக்கிய தேசியக் கட்சியானது சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்த திட்டமிடுவதாகவும், கொழும்பில் இடம்பெற்ற ஊடக அமர்வுகள் பலவற்றில் பேசப்பட்டிருந்தது.

பிணை முறி விவகார விசாரணைகள் முன்னெடுக்கப்டும் பட்சத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நீதித்துறை அமைச்சரை நீக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை

wpengine

வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டக் காரணத்தினை விளக்கினார் சம்பிக்க..

wpengine

எவன்காட் கப்பல் விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

wpengine