உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் புதிய முறையில்..



உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று(22) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் தேவையற்ற அல்லது முரணானவற்றை நீக்கிவிட்டு பொருத்தமானவற்றை சேர்த்துக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை(24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் நேற்று(22) சபையில் சர்ச்சைகள் எழுந்தன இதன்போதே பிரதமர் மேற்குறித்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த அரசாங்கத்தின் போது இதில் பொருத்தமற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டமையே தேர்தல் தாமதமாக காரணம் என்றும், தற்போது 55 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான திருத்தங்களை முன்வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

(rizmira)

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக 31 மனுக்கள் தாக்கல்..!

wpengine

புத்தாண்டின் சுப நேரங்கள்

wpengine

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

wpengine