உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு தாக்குதல் – 42 பேர் பலி



ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசியதில் 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை முடக்கும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளின் விமானப் படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதலில் ஈடுபடுகின்றதாக கூறப்படுகின்றது..

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அந்நகரின் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தன.  இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த தாக்குதலில் ரக்கா நகரை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் உயிரிழந்ததாக சிரியா போர் நிலவரங்களை கண்காணித்துவரும் நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது..

wpengine

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக டுபாய் விமான நிலையம்

wpengine

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

wpengine