ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எனது ஆதரவினை கோருகின்றனர்..



ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீளவும் வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளதாகவும், இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்னும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தான் ஆராய்ந்து வருவதாகவும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கினார்.

இதனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரது அரசியல் வாழ்வு கேள்விக்குறியானது. அத்துடன், மஹிந்த அணியுடனான அரசியல் உறவுகளையும் முறித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே ஐ.தே.கவுக்குள் மறுபடியும் வருவதற்கு அவர் முயற்சித்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், திஸ்ஸ அத்தநாயக்க மறுபடியும் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

 

 

(rizmira)

Related posts

ISIS இனது அடுத்த இலக்கு உலகக் கிண்ணத் தொடர்…

wpengine

அனுராதா ஸ்ரீராமை அழ வைத்த வார்த்தை!

wpengine

சன்ரைசர்ஸ் அணிக்கு பக்க பலமாக இருக்க இந்தியாவிலும் முரளி சாத்துகிறார் தோசையினை… (PHOTOS)

wpengine