உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரத்தின் கீழ் பா.உறுப்பினர் நாமலை விசாரணை செய்ய உத்தரவு..



நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சந்தன களங்சூரிய நேற்று(19) உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. குறித்த அந்தக் கோரிக்கையானது நேற்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

News Editor

அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

wpengine

உலக நாடுகள் வரிசையில் இலங்கை

wpengine