உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்..



அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று(15) தீர்மானித்துள்ளது.

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதையடுத்து அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை தற்காலிகமாக நீக்குவது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களைப் பார்த்து சில மாதங்களின் பின்னர் உறுதியான முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் தொகை குறைவடைந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த இந்த விலை நிர்ணயத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

ஒப்பந்த அடிப்படையில் இ.போ.ச.விற்கு சாரதிகள், நடத்துனர்கள் உட்சேர்ப்பு குறித்து குற்றச்சாட்டு…

wpengine

சிகரட் தொகைகளுடன் சீன பிரஜைகள் மூன்று பேர் கைது…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

wpengine