உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல் களத்தில்..



இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு T-20 போட்டியில் விளையாடுகின்றது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ம் திகதி பல்லகல்லேவில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை.. – பெற்­றோ­லியத் துறை அமைச்சு..

wpengine

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி

wpengine

மாலிங்க விலகக் காரணம் இதுதான் – வெளியிட்டார் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் (VIDEO)

wpengine