உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் இன்று………..


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் கூடவிருக்கின்றது.
இக் கூட்டத்திற்கு  அக் குழுக்களின் சகல உறுப்பினர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸ்ஸநாயக்க  எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் விரைவில் காலாவதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒபந்தம், செப்டம்பர் 2 ம் திகதி நடைபெற இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சமேளனம் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் நிலை பற்றியும் கலந்துரையாடப்படும்.

Related posts

மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதி ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு…

wpengine

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்…

wpengine

தாஜூடீன் கொலை விவகாரம் – சீ.சீ.ரி.வி காட்சிகளை அவசரமாக சோதனையிட முடியாது – பொலிஸார்

wpengine