உள்நாட்டு செய்திகள்

இன்று முதல்  திறைசேரி முறிகள் விநியோகத்தில் புதிய நடைமுறை அமுலாக்கம்


தேசிய கொள்கை மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்றுமுதல் புதிய நடைமுறையின் கீழ் திறைசேரி முறிகள் விதிமுறைகளுக்கமைவான விநியோகம் இடம்பெறும் என்றும் அதன் கீழ் திறைசேரி முறிகள் விநியோகம் குறித்த தகவல்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அத்துடன்  மாதமொருமுறை திறைசேரி முறிகள் தொடர்பான ஏல விற்பனை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்  வட்டி விகிதாசார முகாமைத்துவத்தை இதன் மூலம் மேற்கொள்ள முடிவதுடன் அது பெரும் இலாபகரமாக அமையுமென்றும் கூறினார்.
இரண்டு தொகுதிகள் மாத்திரமே சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படும். போட்டி மிகுந்த ஏலவிற்பனை, போட்டியற்ற ஏலவிற்பனை கட்டாய பரிமாற்றம் உள்ளிட்ட மூன்று நடைமுறைகளில் திறைசேரி முறிகள் ஏல விற்பனை இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

மாரப்பன்னவை தொடர்ந்து விஜயதாசவும் பதவி விலக வேண்டும் – அனுர

wpengine

புதிய ஆண்டில் இன,மத பேதங்களை மறந்து பணியாற்றுவோம் – அமைச்சர் ரிஷாத்

wpengine

நிலவும் அரசியல் குழப்ப நிலையில் திடீரென உணவுப் பொருட்களின் விலை குறைப்பு…

wpengine