உள்நாட்டு செய்திகள்

மாகாண சபை தேர்தல்கள் பின்போடப்பட்டன


வடமத்திய, சப்ரகமுவா மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான காலம் அக்டோபர் 2ம் திகதி முடிவடைய இருகின்றது. இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அம்மாகாண சபைகளுக்கான நியமனங்கள அக்டோபர் 2ம் திகதி  கோரப்படும் என அண்மையில் அறிவித்திருதார்.
ஆனால் நேற்று பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே  நாளில் நடத்துவதற்கும் மற்றும் பழைய விகிதாசார புதிய கலப்பு தொகுதி மற்றும் விகிதாசார  முறைகளை உள்ளடக்கிய தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறும்வரை, மாகாண சபைகள் தேர்தலை பின்போடும் அனுமதியை கோரியிருந்தார். அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
எனவே அரசாங்கம் மாகாண சபைதேர்தல்களை  பின் போடுவதாக அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி அணியினர் அரசாங்கம் இத்தகையதொரு முடிவினை எடுக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானிய இளவரசி ஆன் யாழுக்கு விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு..!

wpengine

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

wpengine

(UPDATE)- TNA மற்றும் JVP இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

wpengine