உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யா படுகொலை சம்பவம் – கைதாகிய சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் பணி நிறுத்தம்..?



கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்படும் என காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கி, தப்பிச் செல்ல ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

(rizmira)

Related posts

A/L ஒக்டோபர் மாதத்தில்

wpengine

தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அமைச்சு பதவி!

wpengine

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்

wpengine