உள்நாட்டு செய்திகள்

கொழும்புக் கழிவுகள் தொடர்பில், அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..



கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள், கழிவுகளை அகற்றும் போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில், அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், 0113-301445 மற்றும் 0115-993755 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, உள்ளூராட்சி மன்ற, கழிவு முகாமைத்துவக் கழிவகற்றல் நடவடிக்கை மத்திய நிலையத்துக்குத் தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கழிவுகள் கொட்டப்படும் பிரதான இடங்களை கண்காணிப்பதற்கு, பாதுகாப்புக் கமெராக்களைப் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறித்த நிலையம் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மஹாபொல அறக்கட்டளை மோசடி – CID விசாரணை

wpengine

வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதிக்கு வாய்ப்பில்லை

Azeem Kilabdeen

100 சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை..!

wpengine