உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட் குறித்த வழக்கில் எழுத்து மூல சமர்ப்பனங்களை முன்வைக்க கால அவகாசம்..



அவன்கார்ட் மிதக்கும் அயுதக் களஞ்சியசாலை தொடர்பான வழக்கில் எழுத்து மூல சமர்ப்பனங்களை முன்வைப்பதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று(12) உத்தரவிட்டுள்ளது.

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் ஊடாக குறித்த இந்த ஆயுதக் களஞ்சியசாலை நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

காலி விளையாட்டு மைதானத்தை நீக்குவதில்லை என விஜயதாச தெரிவிப்பு…

wpengine

கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி கைது…

wpengine

மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்…

wpengine