உள்நாட்டு செய்திகள்

மகா நாயக்க தேரர்களை இன்று சந்திக்கிறார் ஜானாதிபதி..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(06) மகா நாயக்க தேரர்களை கண்டியில் சந்திக்க உள்ளார்.

பௌத்த மதம் மற்றும் பௌத்த விகாரைகள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இன்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள குறித்த இந்த சந்திப்பில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கலந்து கொள்ள உள்ளனர்.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையில்லை என்றும், தற்போதுள்ள சமூக, கலாச்சார பிரச்சினைகள் சம்பந்தமான சில யோசனைகளை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கும் நேற்று முன்தினம் அஸ்கிரி மகா விகாரையில் கூடிய மகாநாயக்க தேரர்கள் இணைந்து தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)

Related posts

அமைச்சர் தயாசிறிக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை – டில்ஷான்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

wpengine

இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine