உள்நாட்டு செய்திகள்

‘சாகரிகா’ புகையிரதத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி.. – ரயில் சேவை தாமதம்..



மாத்தறை இலிருந்து மருதானை நோக்கிப் பயணிக்கும் ‘சாகரிகா’ கடுகதிப் புகையிரதத்திற்கு அம்பலங்கொடை புகையிரத நிலையத்திற்கு அண்மையில், வேனமுள்ள பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் 45 வயது மதிக்கத்தக்க ஒரு கிராம சேவகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் மோதியதில் சாகரிகா புகையிரதத்தின் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறு தாமதமாகியது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

அனைத்து சுற்றுலா விடுதிகளுக்கும் பூட்டு

wpengine

லசந்த கொலை தொடர்பில் அமைச்சர் பொன்சேகாவிடம் CID வாக்குமூலம்…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நாளை நாடாளுமன்றில் விசேட உரை

wpengine