உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு..



பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதனைத் தொடர்ந்து தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள இந்நிலையில் இன்று(29) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

தபால் திணைக்களம் மற்றும் தபால் தொழிற்சங்கங்களின் அனுமதியின்றி நுவரெலியா, கண்டி மற்றும் காலி தபால் காரியாலயங்கள் சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊழியர்களை பணியில் அமர்த்துவது தொடர்பான தமது கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை உரிய பதிலளிக்கவில்லை என தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

பல மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி

wpengine

இன்று காலை திருப்பியனுப்பட்ட விமானங்கள் – நடந்தது என்ன?

Azeem Kilabdeen

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கொண்டு வந்த இரண்டு பெண்கள் கைது…

wpengine