உலக செய்திகள்

ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை..



ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் துருக்கியின் புலனாய்வாளர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருக்கியின் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாக கொண்டு செயற்படும் துருக்கியின் மதத்தலைவர் ஃபட்டுல்லா குலனுக்கு ஆதரவாளர்கள் குறித்தே துருக்கி இந்த புலனாய்வை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஃபட்டுல்லா குலன், துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகலை மேலும் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

500 மில்லியனுக்கும் மேலானோர் பாவிக்கும் web browser இனை கூகுள் நிறுவனம் நீக்கம்..

wpengine

அவுஸ்தி​ரேலியாவில் தொடர் நடுக்கங்கள் ஏற்படலாம்

wpengine

ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 65 பேர் உயிரிழப்பு…

wpengine