உலக செய்திகள்

பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பினின் மகளுக்கும் அழைப்பாணை..



பனாமா கேட் ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்காக எதிர்வரும் 5ம் திகதி ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான FIA’யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

 

(rizmira)

Related posts

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா

wpengine

இரட்டை கோபுர தாக்குதல் இன்றுடன் 16 வருடங்கள்..

wpengine

இந்தோனேஷியாவின் தலைநகர் நீரில் மூழ்கும் அபாயம்

wpengine