உள்நாட்டு செய்திகள்

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் அமைச்சர் எஸ்.பீ. மன்னிப்புக் கோருகிறார்..



தன்னுடைய கருத்துகளால், அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் வருந்தியிருப்பின், அதற்காகத் தான் அவர்களிடம் மன்னிப்புக் கோருவதாக, அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அத்துடன், தன்னுடைய கருத்துகளால், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் வருந்தியிருப்பின், அவரிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக, கொழும்பில் நேற்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

கண்டி அஸ்கிரிய பீடத்தின் சங்க சபையினால், அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில், கண்டியில் கடந்த 13ம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தற்போதைய அரசாங்கத்தில் பதவியிலிருக்கும் அமைச்சர்கள் சிலர் பற்றி, மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, நேற்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க மன்னிப்புக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

Update – கொஸ்கம-சாலாவ பகுதிகளில் மின்வெட்டு அமுலில்

wpengine

புதிய அரசின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று!

Azeem Kilabdeen

ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine