உள்நாட்டு செய்திகள்

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஜப்பான் நிறுவனம் ஆயத்தம்…



வடமேல் மாகாணங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மின்சாரம் தயாரிக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க DAIICHI LAIHTSO GROUP என்ற ஜப்பான் நிறுவனம் முன்வந்துள்ளது.

மாகாண சபை நிறுவனங்களுக்கான பிரதேசத்தில் சேரும் குப்பைகள், மின்சார தயாரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்காக குருணாகல், சுந்தராபொல குப்பை கொட்டும் இடத்தை தெரிவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷமல் சேனரத் ஆகியோரை சந்தித்து இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஐசிசி இன் விஷேட அலுவலகம்…

wpengine

ஆடையின்றி வீதியில் செல்லவா அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ? – ஜனாதிபதி

wpengine

காஸாவில் அமைதியை ஏற்படுத்த எமது நாடு உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம் கோரிக்கை..!

wpengine