உள்நாட்டு செய்திகள்

நானுஓயா விபத்தினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்..



நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதையை கடக்க முற்பட்ட சிறுமி மீது, கனரக வாகனம் ஒன்று மோதியதில் பலியான சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(15) காலை இடம்பெற்றுள்ளதுடன் , இதற்கு எதிராக பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிரதான வீதியை இடை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை பார்வையிட வந்த நுவரெலியா மாவட்ட நீதவானையும் பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

உரிய நேரத்தில் பாதசாரி கடவையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற துக்ககரமான நிகழ்வு இடம்பெற்றிருக்காது எனவும் நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

(rizmira)

Related posts

சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

இன்று 3:00 மணியளவில் தீர்மானமிக்க கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் …

wpengine

பிரதி சபாநாயகர் பதவி ஐ.தே.கட்சிக்கு….

wpengine