உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் கொடுத்து எச்சரிக்கை..



தபால் தொழிற்சங்க ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசு உரிய தீர்வை வழங்க முன்வராததன் காரணமாக இரு நாள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாகவும், எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு தழுவிய பாரிய பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தபால் தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் அதன் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை நாடு முழுவதிலுமுள்ள சுமார் 19000 தபால் ஊழியர்கள் குறித்த இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை பாரியளவில் வெற்றியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாம் அரசாங்கத்துக்கு இன்னும் இரு வாரங்கள் அவகாசம் கொடுக்கின்றோம். இதற்குள் எமது கோரிக்கைக்கு செவிசாய்க்காது போனால், எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் சிந்தக தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு

wpengine

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

wpengine

ஊழியர்களுக்கு விஷேட போக்குவரத்து சேவைகள்

wpengine