உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையினை தோற்கடிக்கத் தீட்டிய திட்டம் குறித்து தாஹிர் ஊடகங்களுக்கு கருத்து..



2017 சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றி தென்னாபிரிக்க அணியினை வெற்றி இலக்கிற்கு அழைத்துச் சென்ற சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் விருதினையும் தட்டிச் சென்றார்.

குறித்த போட்டி குறித்து இம்ரான் கருத்துத் தெரிவிக்கையில்;

“நாம் நல்லதொரு முன் ஆயத்துடன் களமிறங்கினோம். நான் நினைக்கவில்லை என்னால் இவ்வாறு சுழற்பந்து வீசி எதிரணியினை தோற்கடிக்க முடியும் என்று… என்றாலும் அதற்கு முன்னர் நடந்த இங்கிலாந்து – பங்களாதேஷ் போட்டியினை கண்டு கழித்ததில் சிலசில யோசனைகள் தோன்றின.. அது எனக்கு பலனளித்தது. என்றாலும் நான் போட்டிக்கு முன்னர் கடுமையாக பயிற்சி பெற்றேன்.. தலைவர் டி வில்லியர்ஸ் சரியான நேரத்தில் பந்துவீச வாய்ப்பளித்திருந்தார்.. எனது நம்பிக்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு எச்சரிக்கையாக இருந்தது..” என இம்ரான் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்…

wpengine

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பா பரிந்துரை..

wpengine

புதிய வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் மீளவும் நாடாளுமன்றில்..

wpengine