உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஹகீமிற்கு தெரிந்தது ஒன்றுமில்லை – ராஜித



அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்லாட்சி குறித்து எவ்வித விழிப்புணர்வும் இன்றி இருப்பதான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து முஸ்லிம் மக்களும் நல்லாட்சியை சுற்றி வந்த பிறகு தான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்லாட்சிக்கு வந்தார்.

அவர்களுடைய அரசியலுக்கும் எங்களுடைய அரசியலுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது.

அதனால் ரவூப் ஹக்கீமுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லதும் தெரியும் கடந்த அரசாங்கத்தின் போதும் அவருக்கு எவ்வித குறைகளும் இருக்கவில்லை.

எனவே தான் அவருக்கு நல்லாட்சியை குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லை.

இதே வேளை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்கப்போவதில்லை என தெரிவித்திருந்தமையை அமைச்சர் ராஜித மீண்டு நேற்று உறுதி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2 ஆம் கட்ட தபால்மூல வாக்குப்பதிவுகள் இன்று…

wpengine

பங்களாதேஷ் அணியினை சுழல வைக்க வரவுள்ள, மலிந்த புஷ்பகுமார…

wpengine

லங்கா ஈ நியூஸ் இணையதள ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine