உள்நாட்டு செய்திகள்

மூன்று மாவட்டங்களில் இன்று மின் விநியோகத் தடை அமுலுக்கு..



யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று(03) மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 8.00 மணி – மாலை 6.00 மணிவரை குறித்த இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நுணாவில், கைதடி, நாவற்குழி, பருத்தித்துறை நகரம், கைதடி வடமாகாண சபை அலுவலகம், தோப்பு, அச்சுவேலி, பலாலி தெற்கு, ஆவரங்கால், கைத்தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் குருமன்காடு, வைரவபுளியங்குளம், உள்ளிட்ட சில பகுதிகளிலும், மன்னாரில் முருங்கன்பிட்டி, மாவிலங்கேணி, நானாட்டான் மற்றும் நொச்சிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

(rizmira)

Related posts

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

wpengine

தேர்தலை நடத்துமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேஷப்பிரிய கடிதம்…

wpengine

புலமைப்பரிசின் புள்ளியின் அடிப்படையில் பாடசாலைக்கான மேன் முறையீடுகள் இன்றுடன் நிறைவு..

wpengine