உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் நாடுகளுக்கான தடையினை பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அதிரடி உத்தரவு..



முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பினால் விடுத்திருந்த சுற்றுலாத் தடையை மீண்டும் பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் அதிகாரிகளைக் கேட்டுள்ளது.

குறித்த இந்த தடையை நீக்குமாறு கூறி அந்நாட்டின் கீழ் நிலை நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், குறித்த இந்த தீர்ப்புக்கு அமெரிக்காவின் பெட்ரல் மேன்முறையீட்டு நீதிமன்றமும் உடன்பாடு தெரிவித்திருந்தது.

எனினும், இந்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி மீண்டும் சுற்றுலாத் தடையை அமுல்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தடைவிதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

திடீர் உடல்நலக்குறைவு – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

Azeem Kilabdeen

ஊடகவியலாளர் விவகாரம் – தம்மிக ரணதுங்க மீது வாக்குமூலம்

wpengine

மாத்தறை – பெலியத்தை புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பம்…

wpengine