வணிகம்

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி..



சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி வழங்கியுள்ளது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 3 லட்சம் யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

தொண்டு நிறுவனங்களின் ஊடாக குறித்த இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய வாழ் மக்கள் வழங்கும் உதவியாக இதனை கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ ஆணையாளர் கிறிஸ்டோஸ் ஸ்டாலியான்டீஸ் தெரிவித்துள்ளார். சுத்தமான குடிநீர், வீட்டு அத்தியாவசிய உபகரணங்கள் உள்ளிட்டன பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

எரிவாயு தட்டுப்பாட்டில் தீர்வு வழங்க கோரிக்கை

wpengine

5G தொழில்நுட்பத்துடன் மீளவும் NOKIA

wpengine

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் இன்று மக்கள் பாவனைக்கு…

wpengine