உள்நாட்டு செய்திகள்

சைட்டத்திற்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி – SB திசாநாயக்க..



கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் என மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரியொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பதினைந்து லட்சம் ரூபா கடனுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் போதாத காரணத்தினால், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தாம் விரும்பிய ஓர் பிரிவில் கற்கையைத் தொடர முடியும் என அமைச்சர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்கள் தியத்தலாவ முகாமிற்கு

wpengine

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..

wpengine