உள்நாட்டு செய்திகள்

அஞ்சல் அலுவலகத்தில் இன்று முதல் நீர்க் கட்டணம் செலுத்தும் வசதி..



இன்று(01) முதல் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதிலும் காணப்படும் 4,610 அஞ்சல் அலுவலகங்களில் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும்.

நீர்க் கட்டணத்தை அஞ்சல் அலுவலகங்களில் செலுத்துவதற்காக ஐந்து ரூபா தரகுக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும்.

இதன் மூலம் 10 ரூபாவினை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நீர்க் கட்டணங்களை செலுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் இதுவரையில் 15 ரூபாவினை தரகுப் பணமாக செலவிட நேரிடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து ரூபா தரகு அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறவீடு செய்து கொள்ள அஞ்சல் திணைக்களத்திற்கும் நீர் வழங்கல் சபைக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

தடை உத்தரவினை வாபஸ் வாங்கினார் சுஜீவ

wpengine

மாவட்டங்கள் இரண்டிற்கு பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்…

wpengine

‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine