உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரை பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் சதுர கோரிக்கை…



அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் இரண்டு பேரை பணி நீக்குமாறு ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ண கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரை குறித்த பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளார்.

ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதாகவும், இந்த இரண்டு அமைச்சர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான 82 முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டு விசாரணை கூட இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போதும் குறித்த இந்தப் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், இது குறித்து மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசிய மாலன் சமுவல்

wpengine

விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தீர்மானம்…

wpengine