உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – பலத்த பாதுகாப்பு..



இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணப் போட்டி மற்றும் மகளிர் ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நேற்று(23) இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போட்டிகளில் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிப்பாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இணைப்பு – பிரித்தானியாவுக்கு இது தான் முதலடி – ஐஎஸ் தீவிரவாதிகளது மிரட்டல் வீடியோ..

(rizmira)

Related posts

கஜபா படையணியில் திஸர

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை..

wpengine

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Azeem Kilabdeen