உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை ​கட்டட இடிபாட்டு விவகாரம் – விசாரணை அறிக்கை இன்று..



வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை இன்று(22) வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த அந்த அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைச்சிற்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் குறித்த இந்த விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்தமையால், இருவர் உயிரிழந்ததோடு, 21 பேர் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அக்கட்டடத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(rizmira)

Related posts

சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் சேவை இடைநிறுத்தம்

wpengine

கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…

wpengine

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

wpengine