உள்நாட்டு செய்திகள்

UPDATE – வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் பலி.. மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் தீவிரம்..



வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள மாடிக் கட்டிடம் ஒன்று நேற்று(19) சரிந்து வீழ்ந்ததில் சுமார் 23 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையிலும் ஏனையவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(rizmira)

Related posts

சஜித் பிரேமதாஸ தலைமையில் கூட்டம்

wpengine

றக்பி வீரர் வஸீமினது கைத்தொலைபேசி அக்கரப்பத்தனையில் மீட்பு

wpengine

மைத்திரி பிரியாவிடை உரையாற்றவுள்ளார்

wpengine