உள்நாட்டு செய்திகள்

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லங்கா வைத்தியசாலையின் பணிப்பாளர் பலர் இராஜினாமா..



அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லங்கா வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையில் இருந்து பலர் இராஜினாமா செய்துள்ளதாக லங்கா வைத்தியசாலை நிர்வாகம் இன்று(15) கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவகத்துக்கு அறிவித்துள்ளது.

இதன்படி இருவரை தவிர, உள்ளூர் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் 2017 மே 9 ஆம் திகதி முதல் இராஜினாமா செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிறுவன அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த இந்த பதவி விலகல்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், பொது நிறுவன அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு செயலர் தனுஜ வீரரட்ன மற்றும் தினியாவல பாலித தேரர் ஆகிய இருவர் மாத்திரமே இராஜினாமா செய்யவில்லை.

மேலும், இந்நிலையில் குறித்த மாற்றங்களுக்கான சரியான காரணங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

(rizmira)

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!

wpengine

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கு இன்று முதல் தொடர் விசாரணைக்கு..

wpengine