உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘ஒபாமா கேயார்’ திட்டத்தை இரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்..



அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேயார் (Obama Care) திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய மசோதாவை வெற்றி பெற செய்யும் வாக்கெடுப்பில் குடியரசு கட்சி தேவையான அளவு வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறித்த இந்த வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும் வாக்களிக்கவில்லை.

முன்னதாக, அதிபர் டிரம்ப் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சி இரண்டு முறை தோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் இந்த விவகாரம் டிரம்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். மிக மலிவான செலவில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு ‘ஒபாமா கேயார்’ (‘Obama Care) என பெயரிடப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

சர்வதேச பொலிஸ் அமைப்பின் முன்னாள் தலைவருக்கு சிறை

wpengine

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி

wpengine

வாகனங்களை செலுத்தும் போது தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு தண்டப்பணம் இரட்டிப்பு…

wpengine