உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலி முகத்திடல் மே தினக் கூட்டத்தினால் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது – அநுர..



மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(04) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மே தினக் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இவ்வாறாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 45 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

wpengine

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine