உள்நாட்டு செய்திகள்

நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக GMOA இனது முக்கிய ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு..



நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)முக்கிய ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்;

“..மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது குறித்த வைத்தியர் பகிரங்கமாக நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காகவே இவ்வாறு வழக்குத் தொடரப்படும்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தேவையில்லாமல் போராட்டங்களை முன்னெடுக்கும் இந்த வைத்தியர் சங்கம், அப்பாவி நோயாளிகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடி விட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு போராட்டம் நடத்துவோர் விரைவில் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொள்வார்கள்.

மரம் கொத்தி வாழை மரத்தில் கொத்தும் போதுதான் மாட்டிக் கொள்ளும் அதேபோன்று, வைத்திய சங்கத்தினரும் மாட்டிக்கொள்வர்..” என டாக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

இன்று முதல் பாதுகாப்பு ஸ்டிக்கர்

wpengine

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு..!

wpengine

அனுஷ சமரநாயக்க குறித்து விசாரணை

wpengine