உள்நாட்டு செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணை அறிக்கை நாளை..



களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை நாளை(04) கையளிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை பிற்பகல் 03.00 மணியளவில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் குறித்த இந்த அறிக்கை வழங்கி வைக்கப்படும் என, குறித்த குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 27ம் திகதி காலை சிறைச்சாலை பேரூந்து மீது களுத்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது முக்கிய சந்தேகநபரான சமயங் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட ஏழ்வர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து ஆராய, ரூமி மர்சுக் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்…

wpengine

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை – கையெழுத்திட்டார் ஒபாமா

wpengine

சந்தேகத்துகத்துக்கிடமான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கவும்…

wpengine