வணிகம்

சர்வதேச பொருளாதார மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்..



ரஷ்யா, சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த இம்மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடைபெறுவுள்ளது.

கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு இன்று(02) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த அழைப்பை நேரடியாக கையளித்துள்ளார்.

ரஷ்யத் தூதுவருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான குறித்த இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

தீவுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை – பிரித்தானிய சஞ்சிகை தெரிவிப்பு..

wpengine

வட மற்றும் கிழக்கு அகதிகளுக்கு நோர்வே 1.15 பில்லியன் நிதி

wpengine

இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.. -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine