உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அமெரிக்காவில் இடம்பெரும் சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, கம்மன்பில தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இம்மாதம் 18ம் திகதி முதல் 24ம் திகதி வரை இவர் வௌிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி கே.கே.ஆர்.ஹெய்ந்துடுவ இதற்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த கம்மன்பிலவின் கடவுச்சீட்டு இரண்டு இலட்சம் ரூபா தனிநபர் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு திரும்பியதும் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

சம்பிக்க தொடர்பில் சஜித் தலைமையில் கலந்துரையாடல்

wpengine

இன்று(20) ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ள நிலவு…

wpengine

அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில்

wpengine