விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி சார்பில் உமர் அக்மல் மற்றும் அஷார் அலி..



இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உமர் அக்மல் மற்றும் அஷார் அலி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அவுஸ்ரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை 4:1 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணியில் இவர்கள் இருவரும் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன், தற்போது இடம்பெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுடனான தொடரின் ஒருநாள் போட்டிகளிலும் அவர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாக உள்ள சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இவர்கள் இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

“..வயிறு பெரிதாக உள்ளதால் பிடி தவறப்பட்டதாம்.. ” – மாலிங்க ஆவேசம்..

wpengine

நியூசிலாந்து வெற்றிவாகை சூடியது

wpengine

அசேல குணரத்னவை பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ICC இனது விருது யுவேந்திர ஷஹாலுக்கு..

wpengine