ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தந்தையின் பதவியை பறித்ததால், அமைச்சர் பதவியை துறந்த மகன்



மத்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தம்புள்ள அமைப்பாளர் பதவியில் இருந்து தனது தந்தை ஜானக்க பண்டார தென்னகோன் நீக்கப்பட்டதை அடுத்து பிரமித பண்டார தென்னகோன் தனது பதவியை ராஜிமான செய்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடாது, கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்டவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கி விட்டு புதியவர்களை அமைப்பாளர்களாக நியமித்து வருகிறார். இன்றும் 17 பேர் புதிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே சந்திப்பு..

wpengine

சஹ்ரான் உயிரிழந்ததை DNA பரிசோதனையில் உறுதியாகியது!!!

wpengine

வெப்பத்தை தணிப்பதற்கு…

wpengine