உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பெந்தொட்டை பிரதேச விபத்தில் சுமார் 17 பேர் வரை காயம்..



பெந்தொட்டை பிரதேசத்தில் இன்று(25) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம இலிருந்து காலி நோக்கி பயணித்த பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் இன்று (25) அதிகாலை 4.30 மணியளவில் மோதிக் கொண்டதில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது லொறி மற்றும் பஸ்ஸின் சாரதி உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாகொடை, பலப்பிட்டிய மற்றும் பெந்தோட்டை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(rizmira)

Related posts

´சிட்டி பஸ்´ பேருந்து சேவை அமுலுக்கு

wpengine

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine