ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் காலம் முடிகிறது!



மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு கால அவகாசம் கோரியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இந்தக் குழுவினை நியமித்திருந்தார்.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் பூர்த்தியாகிறது. இந்நிலையில், விசாரணைகளை நடத்தி முடிப்பதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறு இவ் ஆணைக்குழு கோரியுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதனால் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சுரங்க லக்மால் மைல்கல்லினை கடந்து சாதனை…

wpengine

மனைவி வெளிநாட்டில்! 03 குழந்தைகளும் தவிக்க..! ஜனபலயவில் நடக்க முடியாது மரணித்த ஜகத்…

wpengine

கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று

wpengine