உள்நாட்டு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு யுத்தமே காரணம் – மஹிந்த..



மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்ற காலம் தாமதிக்கப்பட்டதற்கு யுத்தமே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதரபும் ஸ்ரீமஹாபோதி விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் இது தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த திட்டத்தை அமுல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine

சீன அரசின் அழைப்பின் பேரில் மஹிந்த ராஜபக்ஷ சீன விஜயம்.

wpengine

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine